×

புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு ஒரு மாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

டெல்லி : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,”நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகளுக்கு படிப்படியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் அதிகாரிகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மக்களவை தேர்தலுக்காக தமிழகத்திற்கு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தர கேட்கப்பட்டுள்ளது. புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு ஒருமாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். ஒரு மாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். புதிதாக பெயர் சேர்க்கவும் பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில், வேட்பாளர்கள் இறுதிவேட்பு மனுத்தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை பெயர் சேர்க்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு ஒரு மாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Delhi ,Nadu ,Election Officer ,Satya Prada Chaku ,Chief Election Officer ,Sathya Pradha Chaku ,Chennai Chief Secretariat ,Election ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...